சேலம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
சேலம் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதையடுத்து, அஸ்தம்பட்டியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் அனைத்து துறை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். சேலம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். இந்தக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் ரோகிணி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Discussion about this post