பாலாறு படுகை இரண்டாம் மண்டல பாசனத்திற்காக, திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில், பாலாறு படுகையின் இரண்டாம் மண்டல பாசனத்திற்காக, வரும் 28-ம் தேதி முதல், மொத்தம் 8 ஆயிரத்து 700 மில்லியன் கனஅடிக்கு மிகாமல், திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். தண்ணீர் திறப்பு மூலம், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, சூலூர், உடுமலை, மடத்துக்குளம், பல்லடம், திருப்பூர், காங்கேயம், தாராபுரம் வட்டங்களில் உள்ள, 94 ஆயிரத்து 201 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவித்துள்ள முதலமைச்சர், நீரை சிக்கனமாக பயன்படுத்தி, உயர்மகசூல் பெற, விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Discussion about this post