கோவை மாவட்டம் ஆழியாறு அணையில் இருந்து, பாசனத்திற்காக நாளை மறுநாள் முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டம், ஆழியாறு அணையிலிருந்து, ஆழியாறு 5 பழைய வாய்க்கால்களின் மூலம் பாசனம் பெறும் நிலங்களின் முதல்போக பாசனத்திற்காக, 7ஆம் தேதி முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை 146 நாட்களுக்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டுளஅளார். தற்போதைய நீர் இருப்பு மற்றும் எதிர்பார்க்கப்படும் நீர்வரத்தினைப் பொறுத்து, ஆழியாறு அணையிலிருந்து ஆயிரத்து 156 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிடுமாறு முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். இதனால் ஆனைமலை வட்டத்தில் 6 ஆயிரத்து 400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மையை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும் என்று முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Discussion about this post