மறைந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கனராஜ் உடலுக்கு, முதலமைச்சர், துணை முதலமைச்சர் நேரில் அஞ்சலி செலுத்தினர். கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ், இன்று காலை தனது இல்லத்தில் மாரடைப்பால் காலமானார். கோவை மாவட்டம் வடுகம்பாளையத்தில் உள்ள கனராஜ் இல்லத்தில், வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
Discussion about this post