பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்ட முயற்சிக்கும் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை காக்க தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் திமுக கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்து பேசிய அவர், தமிழகத்தின் உரிமை நிலைநாட்ட அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை பட்டியலிட்டார்.
Discussion about this post