தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று சீரோடும் சிறப்போடும் வாழ வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பொங்கல் திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் உளம்கனிந்த பொங்கல் வாழ்த்து என குறிப்பிட்டுள்ளார்.
விவசாய பெருமக்களின் வாழ்வு சிறக்க தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பட்டியலிட்டுள்ளார். நுண்ணீர்ப் பாசனத்திற்கு சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கும் திட்டம், கூட்டு பண்ணைய திட்டம், உழவன் கைபேசி செயலி, முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம் ஆகிய திட்டங்களை முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் சிறப்பாக கொண்டாட பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டு வருவதை முதலமைச்சர் தனது வாழ்த்து செய்தியில் நினைவு கூர்ந்துள்ளார்.
தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று சீரோடும் சிறப்போடும் வாழ வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பொங்கல் திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Discussion about this post