முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் 2ஆம் கட்டமாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். முதல்கட்டமாக, கடந்த 22ம் தேதி, சேலத்தில் பிரசாரத்தை தொடங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தர்மபுரி, வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் 3 நாட்கள் தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
தொடர்ந்து, 2ம் கட்டமாக சென்னையில், பல்வேறு பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இன்று, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், பல்வேறு பகுதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.
இதேபோல், கடந்த 24ம் தேதி முதல் கட்டமாக, திருப்போரூரில் ஒருநாள் பிரசாரம் மேற்கொண்ட துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், 2ம் கட்டமாக இன்று முதல் தீவிர பிரசாரத்தை தொடங்குகிறார். கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிகளில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு, துணை முதலமைச்சர் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.
Discussion about this post