முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அறம் பிறக்கின்ற போது நான் இவ்வுலகில் அவதரிப்பேன் என்றுரைத்த கிருஷ்ணர் அவதரித்த தினமான, கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார். பகவத் கீதையின் போதனைகளான அனைவரிடத்திலும் அன்பு செலுத்துதல், எளிமையாக அடக்கத்துடன் வாழ்தல் போன்றவற்றை அனைவரும் பின்பற்றி மகிழ்வுடன் வாழ வேண்டும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
துணை முதலமைச்சர் ஒ. பன்னீர்செல்வம் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், நல்லோரைக் காக்கவும், தீயன செய்வோரை அழிக்கவும், அறத்தை நிலை நிறுத்தவும் யுகம்தோறும் பிறக்கிறேன் என்று உரைத்த கிருஷ்ணர் பிறந்தநாளை கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து என குறிப்பிட்டுள்ளார்.
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் இதயப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இந்நாளில் அமைதி, நட்பு, நல்லிணக்கம் மற்றும் உடல் ஆரோக்கியத்துடன் அனைவரும் வாழ வேண்டும் என ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post