தமிழக சட்டப்பேரவை தேர்தல் தொடர்பான ஆலோசனை மேற்கொள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று தமிழகம் வருகிறார்..
தமிழகத்தில் வருகிற ஏப்ரல்-மே மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் ஆணையர்கள் சுஷில் சந்திரா, ராஜீவ் குமார் ஆகியோர் இன்று தமிழகம் வருகின்றனர். தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து இன்றும், நாளையும் அவர்கள் ஆலோசனை மேற்கொள்கின்றனர். பின்னர் புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களுக்கும் சட்டப்பேரவை தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தச் செல்கின்றனர்.
Discussion about this post