சிபிஐ அமைப்புக்கு அளிக்கப்பட்டிருந்த விசாரணைக்கான பொது அனுமதியை சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் அரசு திரும்பப் பெற்றுள்ளது.
சிபிஐ, ரிசர்வ் வங்கி உள்ளிட்ட தன்னாட்சி அமைப்புகளின் சுதந்திரத்தில் மத்திய பா.ஜ.க அரசு தலையிட்டு கட்டுப்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. குறிப்பாக சிபிஐ மூலம் எதிர்க்கட்சி தலைவர்களை மிரட்டும் நடவடிக்கையில் பா.ஜ.க அரசு ஈடுபட்டிருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. இந்தநிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் விசாரணை மேற்கொள்ளுவதற்காக சிபிஐ அமைப்புக்கு அளிக்கப்பட்டிருந்த பொது அனுமதியை அம்மாநில காங்கிரஸ் அரசு திரும்பப் பெற்றுள்ளது. முன்னதாக ஆந்திரா, மேற்குவங்க மாநில அரசுகள் சிபிஐ அமைப்புக்கான பொது அனுமதியை திரும்பப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post