சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பணிபுரியும் பெண்கள், அம்மா இருசக்கர வாகன திட்டத்திற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி இணை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மகளிருக்கு மானியத்தின் விலையில் 50 சதவீதம் அல்லது 25 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்படும் என்றும், மாற்றுத் திறனாளி மகளிருக்கு கூடுதல் வசதி பொருத்திய வாகனத்திற்கு 50 சதவீதம் அல்லது 31 ஆயிரத்து 250 ரூபாய் மானியம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மாற்றுத்திறனாளிகள் Retro – fitted வகையிலான வண்டி வாங்கினால் கூடுதல் மானியத்தொகை வழங்கப்படும் என்றும், வாங்கப்படும் வாகனங்கள் 125 CCக்கு மிகாமல், 2018-ம் ஆண்டில் மாசு ஏற்படுத்தாத வகையிலும் இருத்தல் வேண்டும் கூறப்பட்டுள்ளது. மேலும் மகளிர் பயனாளி தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவராகவும், 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவராகவும் இருத்தல் வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், விண்ணப்பிக்கும் மகளிரின் ஆண்டு வருமானம் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மிகாமலும், ஓட்டுநர் உரிமம் பெற்றவராகவும் இருத்தல் வேண்டும் என்றும், அம்மா இருசக்கர வாகன திட்டத்திற்கு இன்று முதல் வரும் ஜூலை 4 ஆம் தேதி, 5 மணி வரையும் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விண்ணப்பங்களை நேரிலோ, பதிவு தபால் மூலமோ அல்லது விரைவு தபால் மூலமோ சம்பந்தப்பட்ட மண்டல அலுவலங்களில் அளிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
Discussion about this post