சென்னை தூத்துக்குடி இடையே 13 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 8 வழிச்சாலை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. சென்னை-தூத்துக்குடி துறைமுகங்களை இணைக்கும் வகையில், சென்னை-தூத்துக்குடி இடையே புதிதாக 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. 13 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ள இந்த சாலை, சென்னையில் இருந்து விழுப்புரம் வரை 10 வழிச்சாலையாக அமைக்கப்பட இருக்கிறது.
விழுப்புரத்தில் இருந்து தஞ்சாவூர், திருச்சி வரை 8 வழிச்சாலையாக கொண்டுவரப்பட இருக்கிறது. தஞ்சாவூர், திருச்சியில் இருந்து சிவகங்கை வழியாக தூத்துக்குடிக்கு 6 வழிச்சாலை அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் சென்னையில் இருந்து பண்ருட்டி, விருத்தாசலம், அரியலூர், தஞ்சாவூர், திருச்சி, சிவகங்கை, தூத்துக்குடி என இந்த புதிய வழித்தடம் அமைய உள்ளது.
இந்த புதிய சாலை அமைவதன் மூலம் தூத்துக்குடிக்கு சுமார் 100 கிலோ மீட்டர் அளவுக்கு பயண தூரம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் பெறப்பட்டு, சாலை அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Discussion about this post