சென்னை ஆர்.கே. நகரின் 5 குடியிருப்பு பகுதிகளில் அமைக்கப்பட்ட 5 கண்காணிப்பு காமிராக்களின் செயல்பாட்டை சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் துவக்கி வைத்தார்
தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தின் தலைவர் ராஜேஷ் 50 லட்ச ரூபாய் மதிப்பிலான காமிராக்களை மாநகர காவல் ஆணையரிடம் ஒப்படைத்தார். சென்னை மாநகர் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் அமைத்தது மூலம் 50 சதவீத நகைப் பறிப்புச் சம்பவங்கள் குறைந்துள்ளதாக மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார். சென்னை ஆர்.கே.நகருக்கு உட்பட்ட சுனாமி குடியிருப்பு, சேனியம்மன் குடியிருப்பு உட்பட ஆகிய 5 இடங்களில் இந்த காமிராக்கள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது
Discussion about this post