சென்னை உட்பட தமிழகத்தில் பல மாவட்டங்களில் பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், செவ்வாய் மாலை முதல் பல்வேறு மாவட்டங்களில் மழை பொழிந்தது. சென்னையை பொறுத்தவரை நுங்கம்பாக்கம், சேப்பாக்கம் , திருவில்லிக்கேணி, அசோக்நகர், மைலாப்பூர் உட்பட பல பகுதிகளில் விடிய விடிய மிதமான மழை பொழிந்தது. மழை காரணமாக வெப்பம் தணிந்து பல்வேறு பகுதிகளில் குளிர்ச்சி நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
Discussion about this post