அனுமதி பெறாத பேனர்களை அச்சடித்துக் கொடுத்தால் அச்சக உரிமம் ரத்து செய்யப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநகராட்சியின் உரிய அனுமதி பெற்ற பிறகே விளம்பரப் பதாகைகள் மற்றும் தட்டிகள் அமைக்கப்பட வேண்டும் எனவும் பதாகைகளில் அனுமதி எண், அனுமதி பெற்ற நாள், எண்ணிக்கை, அச்சகத்தின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெறுவது அவசியம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
டிஜிட்டல் பேனர் சங்கத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய அறிவுரைகளை பின்பற்ற அறிவுறுத்தியுள்ள மாநகராட்சி, தொழில் உரிம விதிகளுக்கு மாறாக அச்சடிக்கும் பணியினை மேற்கொள்ளும் அச்சகங்களுக்கு சீல் வைக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.