தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு கோடை காலம் தொடங்குவதற்கு முன்பாகவே வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. மாநிலத்தின் பல நகரங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்துகிறது. இந்த வெயில் கொடுமையினால் பொதுமக்கள் பகல் நேரத்தில் வீட்டில் இருந்து வெளியே வருவதற்கே தயங்குகின்றனர். வேறு வழியில்லாத நிலையில் குடையை பிடித்துக்கொண்டும், வாகனங்களில் செல்பவர்கள் துணியால் தங்கள் தலையை மூடியபடியும் வெளியில் சென்று வருகின்றனர்.
இதனிடையே சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும். தமிழகத்தில் இயல்பைவிட வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என கூறியுள்ளது. சென்னை, வேலூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் 2 முதல் 4 டிகிரி செல்சியல் வரை வெப்பம் அதிகரிக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Discussion about this post