ஐஐடி என்பது இந்தியாவில் உள்ள அனைவருக்கும் தெரியும். குறைந்தபட்சம் ஒரு பொறியாளருடன் நண்பர்களாக இருக்கும் அனைவரும் அதைப் பற்றி அறிந்து இருப்பார்கள். பள்ளிப் படிப்பை முடித்தவுடன் அடுத்து என்ன படிக்கலாம் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் வரும் . ஒவ்வொரு மாணவரும் அவரவர் விரும்பும் பல்கலைக்கழகத்தில் பட்டபடிப்பு மற்றும் முதுகலை பட்டபடிப்பைச் செய்ய ஆசைப்படுகிறார்கள், ஏனெனில் ஒவ்வொரு மாணவரும் தனது வாழ்க்கையை நோக்கி வெவ்வேறு நோக்கங்களைக் கொண்டுள்ளனர். இவர்கள் பொறியியல் படிக்க வேண்டும் என்ற கனவோடு அனைவரும் விண்ணப்பிக்கிறார்கள். அப்படி இந்த பொறியியல் படிப்பில் என்ன இருக்கிறது? பொறியியல் படிப்பு என்றால் நமக்கு முதலில் நியாபகம் வருவது கல்லூரிகள் தான் அப்படி என்ன இருக்கிறது இந்த கல்லூரிகளில்?
இந்திய தொழில்நுட்ப நிறுவனம்:
இந்தியாவின் மிக சிறந்த ஐஐடி நிறுவனங்கள் எதுவென்றால், ஐஐடி காரக்பூர், 1951 இல் நிறுவப்பட்டது இந்த தொழில்நுட்ப நிறுவனமானது ஐஐடிகளில் மிகவும் மதிப்புமிக்கது மற்றும் பழமையானதும் ஆகும். ஐஐடி பாம்பே 1958-ல் இரண்டாவதாக நிறுவபட்டது. ஐஐடி கான்பூர் 1958ல் அமைக்கபட்டு 1963-ல் அதீகாரபூர்வமாக நிறுவப்பட்டது. நான்காவது இடத்தில் ஐஐடி மெட்ராஸ் 1959ல் நிறுவப்பட்டது. இது இந்தியாவிலேயே மிகவும் நம்பிக்கைக்குரிய பொறியாளர்களை வளர்த்தெடுத்த நிறுவனம் இதுவாகும். கடைசியாக ஐஐடி டெல்லி நிறுவனம் உள்ளது இது 1963ல் நிறுவப்பட்ட வாளாகம் ஆகும். இதனை தொடர்ந்து முதன் முறையாக தான்சானியா நாட்டில் சென்னை ஐஐடி வாளாகம் வர உள்ளதாக இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அறிவித்தார்.
டெல்லி:
இந்தியாவிற்க்கு வெளியே முதன் முறையாக தான்சானியா நட்டின் ஜான்ஜிபார் மாகணத்தில் சென்னை ஐஐடி வாளாகம் வர உள்ளதாக அறிவித்த நிலையில் வரும் அக்டோபர் மாதம் முதல் பட்டப்படிப்புகள் தொடங்க உள்ளதாக இந்தியாவின் வெளியுறவுத்துறை அமச்சர் ஜெய்சங்கர் அறிவித்தார். அமைச்சர் ஜெய்சங்கர் அரசு பயணம் மேற்கொண்டார். அப்போது அங்குள்ள ஜாஜின்பார் மாகாணத்தில் சென்னை ஐஐடி புதிய வளாகம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்ததில் அமைச்சர் ஜெய்சங்கர் முன்னிலையில் நேற்று முன்தினம் கையெழுத்தானது. இதில் கூடுதலாக சென்னை ஐஐடி, இந்திய கல்வி அமைச்சகம், ஜன்ஜிபார் கல்வி அமைச்சகம் ஆகியவை கையெழுத்திட்டன. இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது; ஜன்ஜிபார் மாகாணத்தில் உள்ள ஐஐடி வளாகம் உலகத்தரத்திலான உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையமாக செயல்படும் என்றும் உலகளாவிய தேவையை கருத்தில்கொண்டு திறனை வளர்க்கும் நோக்கத்துடன் சென்னை ஐஐடி வளாகம் அமைக்கப்படுகிறது என்றும், இது மேலும் சிறப்பாக செயல்படும் இந்திய பல்கலைகழகங்கள், வெளி நாடுகளிலும் அமைக்க வேண்டும் என்று தேசிய கல்விக் கொள்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும், கூறியுள்ளது. மேலும் இங்குள்ள பட்டப்படிப்புகள், பாடத்திட்டங்கள், மாணவர்கள் தேர்வு முறை உட்பட சென்னை ஐஐடி முடிவு செய்யும். இதற்கான செலவுகளை தான்சானியாவின் ஜன்ஜிபார் அரசு ஏற்கும் என்றும் அறிக்கையில் வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது.