இந்தியாவில் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான மத்திய அரசின் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது.
நாடு முழுவதிலும் இயங்கிவரும் கல்வி நிலையங்களுக்கான தரவரிசை பட்டியலை மத்திய அரசு கடந்த 2015 ஆண்டு முதல் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் மூலம் வெளியிட்டு வருகிறது. இதன்படி, பொறியியல் மற்றும் மேலாண்மை உள்ளிட்ட பிரிவுகளில் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான இந்த ஆண்டு தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன் படி, இந்தியாவின் சிறந்த 100 கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பெற்றுள்ளது. மேலும், தமிழகத்திலிருந்து சென்னைஅண்ணா பல்கலைக்கழகம் 7-வது இடத்தையும், கோவை பாரதியார் பல்கலைக்கழகம்14-வது இடத்தையும், பிடித்துள்ளது. அதேபோல்,சென்னைப் பல்கலைக்கழகம் 20-வது இடத்தையும், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் 28-வது இடத்தையும் பிடித்துள்ளது.
Discussion about this post