சென்னை IIT-ல் சாதி பாகுபாடா?- உதவி பேராசிரியர் ராஜினாமா!!!!

சென்னை ஐஐடியில் சாதி ரீதியான பாகுபாடு நிலவுவதாக கூறி, உதவி பேராசியர் ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஐஐடியில் மானுடவியல் மற்றும் சமூகவியல் துறையில் உதவி பேராசிரியராக பணிபுரியும் விபின் புதியதாத் என்பவர், தான் பணியாற்றிய துறையில் தனக்கு சாதி ரீதியான பாகுபாடு நிகழ்த்தப்பட்டதாக புகார் தெரிவித்துள்ளார். பணியில் சேர்ந்த 2019ஆம் ஆண்டு முதல் பல்வேறு காலக்கட்டங்களில் சாதி ரீதியான பாகுபாட்டை சந்தித்ததாக உதவி பேராசிரியர் விபின் தெரிவித்துள்ளார்.

ஐஐடி போன்ற ஒரு நிறுவனத்தில் இது போன்ற சாதிய ரீதியான பாகுபாடுகள் நிகழ்வது தனக்கு அதிர்ச்சியாக இருப்பதாகவும் பேராசிரியர் விபின் தெரிவித்துள்ளார். மேலும், சாதி ரீதியான பாகுபாட்டை சுட்டிக்காட்டி ராஜினாமா செய்வதாக உதவி பேராசிரியர் கடிதம் அனுப்பி உள்ளார்.

ஐஐடி நிர்வாகத்திற்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பேராசிரியர்கள் மற்றும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி நல ஆணைய உறுப்பினர்களை உள்ளடக்கிய விசாரணை அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு சென்னை ஐஐடியில் இஸ்லாமிய மாணவி பாத்திமா தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது ஐஐடியில் சாதி, மத பாகுபாடு இருப்பதாக மாணவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில், தற்போது மீண்டும் புகார் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேற்கண்ட செய்தியை காட்சிப்பதிவு வடிவமைப்பில் காண கீழே உள்ள YOUTUBE-பிரிவில் உள்நுழையுங்கள்…

??⤵⤵↕↕⬇⬇⏬⏬????⤵⤵↕↕⬇⬇⏬⏬????⤵⤵↕↕⬇⬇⏬⏬??

Exit mobile version