விதிமுறைகள் பின்பற்றாமல் ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனை செய்வதால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவதாகவும், இதனால் ஆன்லைன் பட்டாசு விற்பனையை தடை செய்ய வேண்டும் என்றும் சென்னையைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
ஆன்லைன் பட்டாசால் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவதாகவும், விதிமுறைகள் மீறப்படுவதாகவும் அவர் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் ஆன்லைன் மூலம் பட்டாசு விற்க இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. இதுதொடர்பாக வெடிப்பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகள் நவம்பர் 15-ம் தேதிக்குள் பதில் தர வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.