கால்வாய்கள் தூர்வார ரூ.1,034 கோடி நிதி ஒதுக்கீடு – சென்னை மாநகராட்சி

கால்வாய்கள் தூர்வார ஆயிரத்து 34 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, கழிவுகள் அகற்றும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருவதாக உயர் நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

கால்வாய்கள் தூர்வாரும் பணி குறித்தும், கொசு தடுப்பு நடவடிக்கை குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் அனிதா சுமந்த் தலைமையிலான அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்த சென்னை மாநகராட்சி நிர்வாகம், டெங்கு உள்ளிட்ட கொசுக்களால் ஏற்படும் காய்ச்சலை கருத்தில்கொண்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து குறிப்பிட்டுள்ளது.

அதில், கால்வாய்கள் தூர்வார ஆயிரத்து 34 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள நீர் நிலைகளில் இருந்து இதுவரை 10 ஆயிரம் மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்த வழக்கு வரும் 18-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Exit mobile version