மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் அருகே 2 ஏக்கர் நிலப்பரப்பில் 350 மீனவர்களுக்கென மீன் அங்காடிகள் கட்டப்பட்டு வருவதாக சென்னை மாநகராட்சி சார்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீன் பிடித் தடைக்காலமானது 45 நாட்களிலிருந்து 61 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போது வழங்கி வரும் உதவித் தொகையான 5 ஆயிரம் ரூபாயை அதிகரிக்க கோரி மீனவர் சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையின் போது, மாநகராட்சி சார்பில் மீன் அங்காடிகள் கட்டப்பட்டு வரும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
Discussion about this post