பிளாஸ்டிக் கழிவுகளை எரித்தால் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள வரைவு நெகிழிக் கழிவுகள் மேலாண்மை துணை விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தடுக்கும் நோக்கத்தோடு ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தமிழக அரசு தடை விதித்தது. அரசின் உத்தரவை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மீது மறுசுழற்சி செய்யக்கூடியது அல்லது எரியூட்டக்கூடியது எனத் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் அச்சிட்டிருக்க வேண்டும் என்றும், தவறினால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் கழிவுகளை ஒருவர் தன் வசிப்பிடத்தில் எரித்தால் ஆயிரம் ரூபாயும், பொது இடங்களில் எரித்தால் 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் கல்வி அல்லது பிற நிறுவனங்கள் பிளாஸ்டிக் கழிவுகளை எரித்தால் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுசுழற்சி செய்யமுடியாத பிளாஸ்டிக் பாட்டில்களை வியாபார நிறுவனங்கள் வெளியேற்றினாலோ அல்லது எரித்தாலோ 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
Discussion about this post