ஊழியர்கள் இருவருக்கு தொற்று உறுதியானதை அடுத்து, நகராட்சி அலுவலகத்தை சுற்றியுள்ள பகுதிகள் சீல் வைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக, அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும், நகராட்சி அலுவலகம் சுற்றியுள்ள பகுதிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த நிலையில், நகராட்சி அலுவலகம் தற்காலிகமாக தனியார் மண்படத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Discussion about this post