சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வரும் 19ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
கடந்த 24 வருடங்களாக இந்தியா முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு சென்னை மாநகரில் வரும் 19ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ளது. இதற்காக ஆயிரத்து 645 சொட்டு மருந்து மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தவறாமல் போலியோ சொட்டு மருந்து கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம் இந்தியாவை போலியோ இல்லாத நாடு என அறிவித்துள்ள போதிலும், அண்டை நாடுகளில் போலியோ நோய் தாக்கம் உள்ளதால் நோய் கிருமி பரவும் அபாயம் உள்ளது.
Discussion about this post