சென்னை ஆயிரம் விளக்கு மாநகரப் பேருந்து பணிமனையின் பழுது பார்க்கும் பிரிவின் சுவர்களில் காண்போரைக் கவரும் வகையில் வண்ண வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
சென்னை ஆயிரம் விளக்கு பேருந்துப் பணிமனையின் சுவர்களை அழகுபடுத்தும் முயற்சியில் ஓவியக் கல்லூரி மாணவர்கள் அறுபதுக்கு மேற்பட்டோர் ஈடுபட்டனர். இவர்களுடன் போக்குவரத்துத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு ஓவியங்கள் வரையும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். இந்த ஓவியங்கள் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்குப் புத்துணர்ச்சி அளிக்கும் என்றும் பேருந்து ஓட்டுநர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் என்றும் ஓவியக் கல்லூரி ஆசிரியர் தெரிவித்தார்.
Discussion about this post