சென்னையில் 13 நாட்கள் நடைபெற்ற 43வது புத்தக கண்காட்சி நிறைவு பெற்றது. இதில் 20 கோடி ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனையாகியுள்ளதாக பபாசி அமைப்பு தெரிவித்துள்ளது.
சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பபாசி அமைப்பின் சார்பில் நடந்த 43வது புத்தக கண்காட்சி கடந்த 9ஆம் தேதி தொடங்கி, நேற்றுடன் நிறைவுபெற்றது. 13 நாட்கள் நடைபெற்ற புத்தக கண்காட்சிக்கு பள்ளி மாணவர்கள் மட்டுமல்லாது இளைஞர்கள் என பலரும் வருகை தந்தனர். பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக சென்று புத்தகங்களை வாங்கிச் சென்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலத்தவர்களும் கண்காட்சியில் புத்தகங்களை வாங்கிச் சென்றனர். தொல்லியல் துறையின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள கீழடி அறிக்கையும், 24 மொழியில் வெளியிடப்பட்டிருந்தது. அதில் தமிழ், ஆங்கிலம் மட்டுமே 20 ஆயிரம் நகல்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 700க்கும் மேற்பட்ட அரங்குகளில் இருந்து 16 லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்கள், 20 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பபாசி அமைப்பு தெரிவித்துள்ளது.
Discussion about this post