சென்னை எழும்பூரில் ஆடி காரை விற்றுத் தருவதாகக் கூறி பல லட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்ட நபர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
எழும்பூரைச் சேர்ந்த சிபி ராஜேஷ் என்பவர் தன்னுடைய ஆடி காரை விற்று தருவதற்காக தென்காசியைச் சேர்ந்த முத்துமணி என்பவரை அணுகியுள்ளார். காரை விற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்த முத்துமணி கடந்த 2018 ஆம் ஆண்டு காரை எடுத்துச் சென்றுள்ளார். இதைத் தொடர்ந்து 21 லட்ச ரூபாய் மதிப்பிலான காசோலைகள் வழங்கப்பட்டன.
ஆனால் போதிய பணம் இல்லாமல் காசோலை திரும்பி வந்துள்ளது. இது குறித்து கேள்வி கேட்டதற்கு முத்துமணி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிபி ராஜேஷ் தொடுத்த வழக்கின் அடிப்படையில், முத்துமணி மற்றும் அவருக்கு உதவியாக இருந்த சாமுவேல், விஜய் ஆகியோரைக் கைது செய்ய சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து சம்பவம் நடந்த ஓராண்டுக்கு பிறகு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.