மரகதலிங்கம் வாங்கி தருவதாக கூறி ஏமாற்றிய பூசாரியை சிலர் அரிவாளால் தாக்கும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள ஒரு கோயிலில் பூசாரியாக இருப்பவர் ராமர், இவர் ஒரு சிலரிடம் மரகதலிங்கம் எடுத்துத் தருவதாகக் கூறி லட்சக் கணக்கில் பணம் பெற்றதாக தெரிய வந்துள்ளது. பணம் கொடுத்து ஏமாந்த சிலர் அவரை கட்டி வைத்து அரிவாளின் பின்புறமாக அடிப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோ கேரளாவைச் சேர்ந்தவர்கள் எடுத்ததாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
Discussion about this post