ஜனவரி மாதம் நிலவுக்கு சந்திராயன் -2 ஏவவுள்ளதாக விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மைய இயக்குனர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
பூந்தமல்லியில் தனியார் கல்லூரி வளாகத்தில், இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் கீழ் செயல்படும் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையம் சார்பில், இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் கருத்தரங்கம் நடைபெற்றது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 400 க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தின் இயக்குநர் சோம்நாத், வரும் ஜனவரியில், சந்திராயன்-2 நிலவில் செலுத்த தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்தார். நிலவை துளையிட்டு வெப்பநிலை, கனிம வளம், நிலவின் சூழல் ஆகியவற்றை கண்காணிக்கும் செய்முறையில் சந்திராயன்-2 ஈடுபடும் என்றும் அவர் தெரிவித்தார்.
Discussion about this post