சந்திரயான்-2 விண்கலம் இன்று அதிகாலை புவிசுற்றுவட்டப் பாதையைக் கடந்து, நிலவை நோக்கிய பயணத்தைத் தொடங்கியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
நிலவை ஆய்வு செய்வதற்காக 978 கோடி ரூபாய் செலவில் இஸ்ரோ விஞ்ஞானிகள் வடிவமைத்த சந்திரயான்-2 விண்கலம் கடந்த மாதம் 22-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. 5 கட்டங்களாக புவி வட்டப் பாதையை கடந்து சென்ற இந்த விண்கலம் இன்று அதிகாலை 2.21 மணியளவில் நிலவை நோக்கி புறப்பட்டது. வரும் 20 ஆம் தேதியன்று சந்திரயான்-2 விண்கலம் நிலவின் சுற்றுப்பாதையை அடைய உள்ளதாக கூறப்பட்ட நிலையில், நிலவை சுற்றத் தொடங்கியதும் சரியான இடத்தை தேர்ந்தெடுத்து தரை இறங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post