தெலுங்கானா முதலமைச்சராக சந்திரசேகர ராவ் இன்று பதவியேற்பு

தெலுங்கானா முதலமைச்சராக இரண்டாவது முறையாக சந்திரசேகர ராவ் இன்று பதவியேற்க உள்ளார். இதனால், ஹைதராபாத் நகரம் விழாக் கோலம் பூண்டுள்ளது.

தெலுங்கானாவில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிர சமிதி 88 தொகுதிகளில் வெற்றிபெற்றது. காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் 21 தொகுதிகளில் வெற்றி பெற்றனர். பாஜகவுக்கு ஒரு இடம் கிடைத்தது. பிற கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் 9 தொகுதிகளில் வெற்றி பெற்றனர்.

காஜ்வெல் சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சர் சந்திரசேகர ராவ், காங்கிரஸ் வேட்பாளர் பிரதாப் ரெட்டியை 51 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

இந்நிலையில், ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைத்ததை தொடர்ந்து, 2-வது முறையாக சந்திரசேகர ராவ் முதலமைச்சராக இன்று பொறுப்பேற்கிறார். ஹைதராபாத்தில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பார்கள் என்பதால் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Exit mobile version