நாட்டின் முதல் லோக்பால் நீதிபதியாக பினாக்கி சந்திர கோஷ் நியமிக்கப்பட்டுள்ளார்
ஊழலில் ஈடுபடும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளை தண்டிக்க லோக்பால் சட்டம் 2013 உருவாக்கப்பட்டது. இந்த சட்டத்தின் மூலம் மத்தியில் லோக்பால் அமைப்பும் மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைப்பும் உருவாக வழி ஏற்பட்டது. ஆனால் நீண்ட நாட்களாக லோக்பால் அமைக்கப்படவில்லை. இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் 10 நாட்களுக்குள் லோக்பால் அமைப்புக்கு தலைவரை நியமனம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து லோக்பால் அமைப்பின் தலைவராக முன்னாள் நீதிபதி பினாக்கி சந்திர கோஷ் நியமிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் உச்ச நீதிமன்றத்தில் 5 ஆண்டுகள் நீதிபதியாகவும் ஆந்திர உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post