தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மிதமான மழையும் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பச்சலனம் காரணமாகவும் தென்மேற்கு பருவமழை காரணமாகவும் குமரி, நெல்லை, தேனி, கோவை போன்ற மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் தேவாலா பகுதியில் 10 சென்டி மீட்டர் மழையும், நீலகிரி மாவட்டம் கூடலூர் பஜார் பகுதியில் 7 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
வடக்கு மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட இடங்களில் 3 நாட்களுக்கு அனல் காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 41 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 30 டிகிரி செல்சியசும் பதிவாக வாய்ப்புள்ளது.
தென்மேற்கு திசையில், 35-ல் இருந்து 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Discussion about this post