தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுவை மற்றும் கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடனும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர கடலோர பகுதிகளில் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் அடுத்த 24 மணி நேரத்திற்கும், தெற்கு குஜராத், மகாராஷ்டிரா, கேரளா, லட்சத்தீவு கர்நாடக கடற்பகுதிகளுக்கு அடுத்த 48 மணி நேரத்திற்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Discussion about this post