இரண்டு தினங்களுக்கு கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரி கடல் முதல் தெற்கு ஆந்திரா கடற்பகுதி வரை குறைந்த காற்றத்தழுத்தம் நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அக்டோபர் 1ஆம் தேதி முதல் இதுவரை 32 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது, இது இயல்பைவிட 13 சதவீதம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையின் ஒருசில இடங்களில் இன்று அதிகாலை மிதமான மழை பெய்தது.
Discussion about this post