அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 8 மாவட்டத்தில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தேனி, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும் பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலம், தர்மபுரி, நீலகிரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவள்ளூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளா , கர்நாடக கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு, தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால், செப்டம்பர் 12-ஆம் தேதி வரை மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செ ல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Discussion about this post