சவால்கள் இன்னும் முடியவில்லை என்றும் பதிலடி கொடுக்க தயாராக இருங்கள் என்றும் பாகிஸ்தான் படையினரிடம், அந்நாட்டின் ராணுவ தளபதி கூறியுள்ளார்.
இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவும் நிலையில், பாகிஸ்தான் விமானப்படை தளபதி முஜாகித் அன்வர் கான், எல்லைப்புற ராணுவ முகாம்களுக்கு நேரில் சென்று, விமானப்படை வீரர்களையும், ஊழியர்களையும் சந்தித்து பேசினார். சமீபத்திய மோதலின்போது, நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க, பாகிஸ்தான் விமானப்படை சிறப்பாக செயல்பட்டது என்றும் அதற்காக விமானப்படையை நினைத்து நாடு பெருமைப்படுகிறது என்றும் பாராட்டியுள்ளார். மேலும், சவால்கள் இன்னும் முடியவில்லை, படைகளை தயாராக வைத்திருங்கள் என்றும் எதிரியிடம் இருந்து அத்துமீறல் ஏதும் உருவானால், பதிலடி கொடுக்க தயாராக இருங்கள் என்றும் கூறியுள்ளார். அபிநந்தனை பாகிஸ்தான் ஒப்படைத்து விட்டாலும், பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத அமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கை தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில், இந்தியா நடத்தியது போன்ற சர்ஜிக்கல் ஸ்டிரைக் ஒன்றை, பாகிஸ்தான் மீது நடத்தப் போவதாக ஈரான் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post