இந்தியாவில் முதன்முறையாக கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு தடுப்பூசி!

இந்தியாவில் பெண்களுக்காக முதன்முறையாக கர்ப்பப்பைப் புற்றுநோய்க்கான தடுப்பூசி முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை ஆண்டுதோறும் ஒரு லட்ச்த்தி இருபத்தைந்தாயிரம் பெண்கள் கர்ப்பப்பைப் புற்றுநோயினால் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் வருடத்திற்கு எழுபத்தைந்தாயிரம் பேர்கள் இறக்கின்றனர். இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக பயோடெக்னாலஜி துறையுடன் இணைந்து சீரம் நிறூவனம் ‘செர்வோக்’ எனும் பெயரில் தடுப்பூசி ஒன்றினை உருவாக்கியுள்ளது.YouTube video player

இந்த தடுப்பூசியை 9 வயது முதல் 14 வயது வரை உள்ள சிறுமிகளுக்கு செலுத்தலாம் என்று  திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த தடுப்பூசியின் விலையினை ரூபாய் 200 லிருந்து 400 வரை நிர்ணயிக்கப்போவதாக சீரம் நிறுவனம் தகவல் அறிவித்துள்ளது. வெளிநாடு கம்பெனிகள் இந்த தடுப்பூசியினை மூன்றாயிரம் முதல் நான்காயிரத்திற்கு விற்றுக் கொண்டு இருக்கின்றன.

Exit mobile version