கோவை அரசு மருத்துவமனையில் நீமோக்காகல் தடுப்பூசி மற்றும் ரத்தநாள அறுவை சிகிச்சை தொடக்க விழா நடைபெற்றது.
விழாவை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர். முன்னதாக உடல் உறுப்பு தானம் குறித்தான விழிப்புணர்வு பேரணியை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.
700க்கும் மேற்பட்ட செவிலியர் பள்ளி மாணவர்கள் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ராசமணி, மருத்துவமனை முதல்வர் அசோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழகத்தில் தான் ஒன்றரை கிலோவிற்கு குறைவாக பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு நீமோக்காகல் தடுப்பூசி போடப்படுவதாக தெரிவித்துள்ளார்.
Discussion about this post