தஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கு விழாவையொட்டி பூர்வாங்க பூஜை மற்றும் கொடிமரம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தஞ்சை பெரியக் கோயிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற பிப்ரவரி 5-ஆம் தேதி குடமுழுக்கு நடைபெறுகிறது. கடந்த ஓராண்டாக குடமுழுக்கு விழாவுக்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில், ஒரு மாத காலமாக யாகசாலை பணிகளும், கலசத்தை புதுப்பிக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
2002- ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட கொடிமரத்திற்கு மாற்றாக பர்மாவில் இருந்து 9 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 40 அடி உயரத்தில் வாங்கப்பட்ட புதிய கொடிமரத்தினை சரிசெய்யும் பணி நடைபெறுகிறது. தொடர்ந்து, பூர்வாங்க பூஜைகள், கோபுரங்களுக்கு சாரம் அமைக்கும் பணி, யாகசாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறன.
Discussion about this post