பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டிக்குள் கொண்டுவர மத்திய அரசு தயாராக இருப்பதாக நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவருவது குறித்து ஜி.எஸ்.டி கவுன்சில் தான் முடிவு செய்யும் என்றார். எந்த ஒரு முடிவும் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் எட்டப்பட வேண்டும் என தான் விரும்புவதாக கூறிய அருண் ஜெட்லி, பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டிக்குள் கொண்டுவர மத்திய அரசு தயாராக இருப்பதாக கூறினார்.
ஆனால் எந்த ஒரு முடிவையும் மாநிலங்களின் மீது திணிக்க போவதில்லை என்றும், அனைவரிடமும் ஒருமித்த கருத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.