மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வூதியத் தொகையில், அரசின் பங்களிப்புத் தொகையை உயர்த்தி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மக்களவைத் தேர்தலையொட்டி, அரசு ஊழியர்களை கவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ், 2004-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பணியில் சேர்ந்த மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஓய்வூதியத் தொகையை உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஓய்வூதியத் தொகை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில், அரசு சார்பில் 10 சதவிதம் பிடித்தம் செய்யப்பட்டு, ஓய்வூதிய நிதியாக வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் இனிமேல் 14 சதவிதம் ஓய்வூதியத் தொகையை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த புதிய பயன், அடுத்த ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என கூறப்படுகிறது.
Discussion about this post