தஞ்சாவூர் மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழுவினர், இரவு நேரத்தில் பார்வையிட்டதால் விவசாயிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தொடர் கனமழையால், தஞ்சை மாவட்டத்தில் சுமார் 6 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் பயிர்கள் பாதிக்கப்பட்டது. இதனிடையே மத்திய உள்துறை இணைச் செயலர் ராஜீவ் சர்மா தலைமையிலான 4 பேர் கொண்ட குழுவினர் அம்மாபேட்டை பேரூராட்சிக்குட்பட்ட உக்கடை கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர் நிலங்களை நேற்றிரவு 7 மணி அளவில் பார்வையிட்டனர்.
இதனால், விவசாயிகள் அதிருப்தியடைந்தனர். அப்போது, நெற்பயிர் பாதிப்புகள் குறித்து மத்தியக் குழுவினரிடம் எடுத்துரைத்த விவசாயிகள், ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
Discussion about this post