சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்யானவை அல்ல என்று மத்திய கண்காணிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
பரஸ்பர ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தியதையடுத்து, சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா மற்றும் சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா ஆகியோரை பொறுப்பில் இருந்து விடுவித்த மத்திய அரசு, இருவரையும் கட்டாய விடுப்பில் அனுப்பியது. நாகேஸ்வர ராவ் என்ற ஐபிஎஸ் அதிகாரி, சி.பி.ஐ. பொறுப்பு இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
இந்தநிலையில், அலோக் வர்மா தொடர்ந்த வழக்கில், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் விசாரணை அறிக்கை சீல் வைத்த உறையில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை என்றும் ஒருசில குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட வேண்டியவை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் அறிக்கை மீது செவ்வாய்க்கிழமைக்குள் அலோக் வர்மா பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
செவ்வாய்க் கிழமை நடைபெறும் விசாரணையின் போது உண்மையின் அடிப்படையில் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
Discussion about this post