மத்திய அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளால் பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.
டெல்லி தல்கோதரா மைதானத்தில் நடைபெற்ற வர்த்தகர்கள் மாநாட்டில் உரையாற்றிய அவர், முந்தைய காங்கிரஸ் அரசு பணவீக்கத்தை கட்டுப்படுத்த தவறியதால் தான் தொழில்வளர்ச்சி பாதிக்கப்பட்டதாகவும், பாஜக ஆட்சிக்கு வந்ததும் பண வீக்கம் கட்டுப்படுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டார். மேலும் 5 ஆண்டுகால ஆட்சியில் வர்த்தக வளர்ச்சிக்கு தடையாக இருந்த 1500-க்கும் மேற்பட்ட சட்டங்களை நீக்கியுள்ளதாக குறிப்பிட்ட பிரதமர், ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு பிறகு வர்த்தகத்தில் வெளிப்படைத் தன்மை அதிகரித்திருப்பதையும் சுட்டிக் காட்டினார்.
மேலும் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் தொழில் செய்ய உகந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 65 இடங்கள் முன்னேறி உள்ளதையும் சுட்டிக் காட்டினார்.