ஹுபெய் மாகாணத்தில் உள்ள இந்தியர்களை மீட்க 2 விமானங்களை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
சீனாவில் கொரோனா வைரஸால் இதுவரை 132 பேர் உயிரிழந்த நிலையில், அந்நாட்டில் உள்ள இந்தியர்கள அழைத்து வர மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார், ஹுபெய் மாகாணத்தில் வசிக்கும் இந்தியர்கள் அழைத்து வர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
இதற்காக 2 விமானங்களை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகவும், 2 விமானங்களை இயக்குவதற்கு அனுமதி தருமாறு சீன அரசிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், இந்திய தூதரக அதிகாரிகள் மூலம் இந்தியர்கள் தகவல் அளிக்கப்பட்டு தாயகம் திரும்ப வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.