மருத்துவ படிப்புகளில் 25 சதவிகித இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், இந்த ஆண்டு நீட் தேர்வில் தமிழகத்தில் 48 புள்ளி 57 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டைவிட 9 சதவிகிதம் அதிகமான மாணவர்கள் இந்த ஆண்டு தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு 22 மருத்துவ கல்லூரிகளில் 2 ஆயிரத்து 900 இடங்கள் இருந்த நிலையில், தற்போது புதிய மருத்துவ கல்லூரியுடன் கூடுதலாக 250 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பெரம்பலூர், உதகை, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் மருத்துவ கல்லூரிகளுக்கான பரிந்துரைக்கு அனுமதி கிடைக்கமல் நிலுவையில் உள்ளன. திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் மருத்துவ கல்லூரி அமைப்பதற்கான அழுத்தம் தமிழக அரசுக்கு உள்ளது.
இந்நிலையில் மருத்துவ கல்லூரி சேர்க்கைக்கு 25 சதவிகித இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 5 ஆண்டுகளிலும் தலா 25 சதவிகிதம் உயர்த்திக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் பொருளாதாரத்தில் நலிந்த முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீட்டை இந்த ஆண்டே ஒதுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
Discussion about this post