தமிழகத்துக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை12 ஆயிரத்து 305 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது.
மத்திய அரசு 2019-20 ம் நிதியாண்டில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கவேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை 1 லட்சத்து 65 ஆயிரத்து 302 கோடி ரூபாயை வழங்கியுள்ளது. தமிழகத்திற்கு வழங்க வேண்டிய சரக்கு மற்றும் சேவைப் போக்குவரத்து வரிக்கான இழப்பீட்டு தொகையாக 12 ஆயிரத்து 305 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியுள்ளது. இதேபோல் புதுச்சேரி அரசுக்கு ஆயிரத்து 57 கோடி ரூபாயை ஜிஎஸ்டி இழப்பீடாக மத்திய அரசு வழங்கியுள்ளது.
Discussion about this post