வருமான வரி செலுத்தும் படிவங்களில் பல்வேறு மாற்றங்களை செய்து, முழுக்க தானியங்கி மூலமாக வருமான வரி தாக்கலை மேலும் எளிமையாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
வருமான வரி தாக்கல் செய்ய ஏராளமான ஆவணங்களை தயார் செய்து, இணையத்தில் படிவங்களை பூர்த்தி செய்யும் நடைமுறை இருந்து வருகிறது. இதனால் ஏற்படும் குழப்பங்களால் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வரி செலுத்தாமல், பிறகு அபராதத்துடன் வரி செலுத்த நேரிடும். இதனை தவிர்க்க முழுக்க முழுக்க தானியங்கி மூலம் வருமான வரி தாக்கலை மேலும், எளிமையாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதேபோல், வருமான வரி செலுத்தும் படிவங்களில் மாற்றங்களை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, வருமான வரி தாக்கல் செய்யும் படிவத்தில், பங்கு வர்த்தகம் மூலம் பெறப்படும் ஆதாயங்கள், பரஸ்பர நிதிகளில் இருந்து பெறப்படும் ஈவுத்தொகை, சேமிப்பு கணக்குகள் மூலம் பெறப்படும் வட்டி ஆகியவற்றின் மீதான வரியை தானாக மதிப்பீடு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அலுவலக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
Discussion about this post